Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜூன் 16 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை, தெருவாரத்தில் உள்ள விளையாட்டுக் கழத்தின் மைதானத்தில் சனிக்கிழமை(15) மாலை 5 மணியளவில் இவ் வாள்வெட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இதன் போது சிவகுமார் ராகுலன் 25 வயதான இளைஞன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:- மீசாலை, தெருவாரத்தில் உள்ள கரப்பந்து விளையாட்டுக் கழகமொன்று, கரப்பந்து சுற்றுப் போட்டி நடாத்தி வருகிறது. இச் சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்று சனிக்கிழமை(15) மாலை 5 மணியளவில் இவ் வாள்வெட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது 7:30 மணிக்கு ஆரம்பமாக இருந்தது.
இந்நிலையில் மாலை 5 மணியளவில் 12 பேர் கொண்ட காடையர் கூட்டமொன்று மது போதையில் வாள் மற்றும் பொல்லுகளுடன் உட்புகுந்து அங்கு நின்றிருந்தவர்கள் மீதும் வீதியால் பயணித்தவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இதனை அவதானித்த ஊரவர்கள் மற்றும் விளையாட்டுக் கழக வீரர்கள் தாக்குதல் நடாத்திய காடையர் கூட்டத்தை சுற்றிவளைத்து, காடையர்களை நையப்புடைத்து நால்வரை மடக்கிப் பிடித்து கட்டி வைத்தனர்.
ஏனையவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர். அவர்களைத் துரத்திச் சென்றபோதும் காடையர்கள் கூட்டம் தப்பித்துச் சென்றுள்ளனர்.
ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நால்வரையும் மின் கம்பத்துடன் கட்டி வைத்து விட்டு, கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடிகாமம் பொலிஸார் நான்கு காடையர்களையும் கைதுசெய்துள்ளனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாள் மற்றும் கத்தி என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதாகிய நால்வரும் 17 மற்றும் 18 வயதுகளையுடையவர்கள் என்றும் தாக்குதல் நடாத்த வந்த ஏனையோரும் குறித்த வயதினையுடைவர்கள் என்றும், இவர்கள் மந்துவில், எழுதுமட்டுவாழ், உஷன், கொடிகாமம் பகுதிகளைச் சேர்ந்த வெளிக் கிராமங்களைச் சேர்ந்த பதின்ம வயதினரே இத்தாக்குதல் தாரிகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதுடன் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடாத்திய ஏனையோரையும் கொடிகாமம் பொலிஸார் தேடி வருகின்றனர்.
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago