2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கர்ப்பிணிகளுக்கான ’தடுப்பூசி வாரம்’

Freelancer   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக தடுப்பூசி வாரம் அறிவிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு காஸல் வீதி மகளிர் வைத்தியசாலையின் மகப்பேற்றியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டொக்டர் சனத் லனரோல் தெரிவித்தார்.

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இத் திட்டத்தை சுகாதார அமைச்சின் கீழ் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு கடந்த மாதம் சுகாதார அமைச்சு  அனுமதி வழங்கியதாகவும் நாட்டிலுள்ள சுமார் 300,000 கர்ப்பிணி தாய்மார்களில் 200,000 க்கும் அதிகமானோர் இன்னும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என்றும் சுடடிக்காட்டினார்.

கொரோனா தடுப்பூசி, கர்ப்பிணி தாய்மாருக்கு எந்தப் பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என்பதை மருத்துவ பரிசோதனைகள் வெளிக்காட்டியுள்ளதாகவும் மொடர்னா, ஃபைசர் மற்றும் சினோஃபார்ம் ஆகிய தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது என்றும் குறிப்பிட்டார்.

சுகாதார அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில், கொரோனா மூன்றாவது அலையில் 20 கர்ப்பிணிகள் மரணித்துள்ளனர்.   

அவர்களில் பெரும்பாலோர் இரண்டு டோஸ்களில் ஒன்றைப் பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X