2024 மே 01, புதன்கிழமை

குறுந்தகவல் ஊடான மோசடி

Freelancer   / 2024 ஏப்ரல் 18 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டில் அல்லது வௌிநாட்டில் இருந்து பொதிகள் கிடைத்துள்ளன என தெரிவித்து குறுந்தகவல் ஊடாக  வாடிக்கையாளர்களின் கடனட்டை தொடர்பான தகவல்களை பெறும் மோசடி குறித்து அவதானமான இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடி சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போலி இணையத்தளம், போலி தொலைபேசி இலக்கங்கள் மூலம் இந்த மோசடி இடம்பெறுவதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தபால் திணைக்களத்தினை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இவ்வாறான மோசடிகளில் சிக்க வேண்டாம் என திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

தபால் திணைக்களமானது, கடன் அட்டைகள் தொடர்பில் குறுஞ்செய்திகள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் தகவல்களை பெற்றுக்கொள்வதில்லை என தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .