2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கற்குவாரியால் தினசரி இன்னல்களை சந்திக்கும் பிரதேச மக்கள்

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை – தெடங்கொட பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வெல்லத்த பகுதியிலுள்ள கற்குவாரியொன்றால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் சிரமங்களை ​எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

குறித்த கற்குவாரிக்கு வைக்கப்படும் வெடிப்பொருட்களால், அப்பகுதியிலுள்ள வீடுகளில் விரிசல்கள் விழுவதுடன், பாரியளவில் அதிர்வுகளும் ஏற்படுவதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் ஐந்து வருட காலங்களாக இயங்கி வரும் இந்த கற்குவாரியால், இரண்டு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான உரிய தீர்வொன்றை அதிகாரிகள் விரைவில் பெற்றுத்தர வேண்டுமெனவும் ​பிரதேச மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .