Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 29 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளை கனத்தை சுற்றுவட்டார பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பாரந்தூக்கியின் ஓட்டுநர் நிமந்த சேனாதீரவை ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் எம்.என். ரிஜ்வான், செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டார்.
வாகனத்தின் உரிமையாளர் மாலன் ஸ்ரீ பெர்னாண்டோவை ரூ. 500,000 சரீர பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
விபத்து தொடர்பில் பொரளை பொலிஸார், நீதிமன்றத்தில் முன்வைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே மேலதிக நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
முந்திய செய்தி,
பொரளை கனத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழு பேர் காயமடைந்தனர்.
சம்பவத்தை அடுத்து கிரேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவர், சம்பவத்தின் போது கஞ்சா போதையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ராஜகிரியவில் இருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன், ஆறு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போக்குவரத்து சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதுருகிரியவைச் சேர்ந்த 62 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.காயமடைந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் அடங்குவர்.
கிரேனில் பிரேக் செயலிழந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளின் சாரதியான இளைஞனின் இரண்டு கால்களும் முழங்காலுக்கு கீழே சுக்குநூறாக நொறுங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .