2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

காலியில் வீடு ஒன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Freelancer   / 2026 ஏப்ரல் 04 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலியில், தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில பகுதியில் வீடு ஒன்றிலிருந்து, வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரின் சடலங்கள் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாரின் தகவல்படி, வெட்டுக் காயங்களுக்கு உள்ளான மற்றொரு பெண் கராபிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, வீட்டின் முன்பக்கத்தில் வயதான பெண் ஒருவரின் சடலமும், வீட்டின் அறையில் உள்ள கட்டிலில் 35 வயதுடைய ஆணின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காயமடைந்த பெண் வீட்டின் அறை ஒன்றிற்குள் இருந்த நிலையில் மீட்கப்பட்டார். அதேநேரம், அவரது 17 வயது மகன் காயங்கள் எதுவுமின்றி வீட்டின் மற்றொரு பகுதியில் இருந்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வயதான தாய், அவரது மகள் மற்றும் மருமகன் என நம்பப்படுகிறது.

இந்தத் தாக்குதல் குடும்பத் தகராறு காரணமாக நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .