Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்கிசை - அரலிய வீட்டுவசதிப் பகுதியில் நேற்று இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் லுனாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் கல்கிசை பொலிஸார் கூறினர்.
இறந்தவர் அங்குலான பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.
இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் இந்தக் கொலை நிகழ்ந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையைச் செய்த சந்தேக நபர்கள் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், அவர்களைக் கைது செய்ய கல்கிவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
16 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
4 hours ago