2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கல்புரண்டு விழுந்ததில் யாத்திரிகள் மூவர் காயம்

Editorial   / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நல்லதண்ணி- சிவனொளிபாதமலை வீதியில் மஹகிரிதம்ப பிரதேசத்தில், கல்லொன்று புரண்டு விழுந்ததில், சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றுக்கொண்டிருந்தவர்களில் மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அவர்கள் மூவரும், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

தங்கல்ல, கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே, இவ்வனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளனர் என்றும், அவர்களின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருக்கின்றது என்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .