2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

களஞ்சியசாலைகளுக்கு நாளை முதல் பூட்டு

Freelancer   / 2023 செப்டெம்பர் 29 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளை இந்த மாத இறுதியில் மூடுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொடவுக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைய நாளை (30) முதல் களஞ்சியசாலைகளை  மூடுவதற்கு சபை தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தால் சிறுபோகத்துக்காக நெல் கொள்வனவுகள் ஆரம்பித்த போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் 39 களஞ்சியசாலைகள்  திறந்து வைக்கப்பட்டன.

நெல் விலை 60 முதல் 70 ரூபாய் வரை குறைந்திருந்த போது கீரி சம்பா 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தனியார் துறையினரும் நெல் கொள்வனவு விலையை 110 ரூபாவினால் அதிகரித்துள்ளனர்.
 
இந்த நடவடிக்கையின் காரணமாக விவசாயிகள் தமது அறுவடைக்கு நல்ல விலையைப் பெற்றுக் கொள்ள முடிந்ததாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

விவசாயிகள் நெல்லை சபைக்கு விற்கவில்லை என்றும், அதிக விலைக்கு தனியாருக்கு நெல்லை விற்றதாகவும் கூறிய அமைச்சர், நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யாததால், இம்முறை பருவம் முடியும் தருவாயில் களஞ்சியங்களை திறந்து வைப்பதில் அர்த்தமில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இயக்கக் கட்டணங்கள் அதிகரித்து வருவதாலும், விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை விற்பனை செய்யாததாலும் இம்மாதம் 30ஆம் திகதிக்கு பின்னர் களஞ்சியசாலைகளை மூட நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X