2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கழுகின் தோலை உரிக்கும் முன் படம்பிடித்துள்ளனர்

Kanagaraj   / 2016 மார்ச் 14 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கழுகை பிடித்து அதன் தோலை உரிப்பதற்கு முன்னர், அதனை படமெடுத்து இணைத்தளத்தில் தரவேற்றம் செய்ததாக கூறப்படும் இளைஞனை, சனிக்கிழமையன்று கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி பிரதேசதத்தில், கழுகொன்றை பிடித்து, தோலை உரித்து, அதனை படுகொலைச்செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மற்றுமொரு இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரின் அலைபேசியை சோதனைக்கு உட்படுத்திய போது, கழுகு உயிருடன் இருக்கும் போது எடுக்கப்பட்ட படமும் அந்த அலைபேசியில் இருந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X