2025 மே 01, வியாழக்கிழமை

கழிப்பறைக்குள் கான்ஸ்டபிள் சிக்கினார்

Editorial   / 2025 மார்ச் 09 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் கழிப்பறையில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் வகை போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும் 39 வயதுடைய கான்ஸ்டபிள் ஆவார்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​இந்த  கான்ஸ்டபிள் ஐஸ் வகை போதைப்பொருட்களுடன் சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .