Editorial / 2021 மார்ச் 10 , மு.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹங்வெல்ல விடுதியொன்றில் படுகொலை செய்யப்பட்டு, தலையில்லாது முண்டமாக, கொழும்பு-டாம் வீதியில் கைவிடப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண், குருவிட்ட தெப்பனாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்ணுடையதென டி.என்.ஏ பரிசோதனை ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் தாய், சகோதரனிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட உயிரியல் மாதிரிகளை, அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தின் மேலதிக பகுப்பாய்வாளர் எல். ஜயமான, ஒப்பிட்டுப் பார்த்துப் பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னரே உறுதிப்படுத்தப்பட்டது.
தலையில்லாத முண்டமாக மீட்கப்பட்ட அப்பெண், தெப்பனாவ பகுதியைச் சேர்ந்தவரென ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டது. எனினும், தலையின்றிக் காணப்பட்டமையால் சந்தேகத்துக்கிடமின்றி ஆளடையாளத்தை உறுதி செய்ய மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எவ்வாறாயினும் துண்டிக்கப்பட்ட தலை, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும், கழுத்தை அறுக்கும் முன்னரேஇ அப்பெண் இறந்துவிட்டாள் என்பதும், ஆரம்பக்கட்ட பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், பிரேத பரிசோதனைக்குப் பின்னரே உறுதிப்படுத்த முடியும்
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மார்ச் முதலாம் திகதியன்று மீட்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், மொனராகலை -படல்கும்புற பகுதியில் மறுநாள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
8 minute ago
24 minute ago
36 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
36 minute ago
39 minute ago