2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு சீருடை வவுச்சரில் விசேட சலுகை

Princiya Dixci   / 2016 மே 11 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி 

பாடசாலை சீருடை வழங்கும் திட்டத்தில், கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு விசேட சலுகை அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

'பாடசாலை சீருடை வழங்கும் திட்டத்தில் சகல பாடசாலைகளுக்கும் சீருடை வவுச்சர் வழங்கப்படுவதைப் போன்று, கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கும் வழங்கப்படும். இதில் விசேடமாக கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு அதிகாரிகள் நேரடியாக விஜயம் செய்து, வவுச்சரைப் பெற்றுக்கொண்டு சீருடை துணிகளை வழங்குவர். இத்திட்டம், விரைவில் அமுல்படுத்தப்படும்.

இதன்மூலம், கடந்த காலத்தில் பாடசாலை சீருடைத் துணி வழங்கும் திட்டத்தில் கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்று, ஏமாற்றப்பட மாட்டார்கள்' என்றார்.

மேலும், சுற்றுநிரூபத்துக்கமையவே கல்வி அமைச்சின் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இதற்கமையவே, பாடசாலைகளும் செயற்பட வேண்டும். சுற்றுநிரூபத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X