2025 மே 12, திங்கட்கிழமை

கெஹெலியவிடமிருந்து அங்கீகரிக்கப்படாத பொருட்கள் மீட்பு

Simrith   / 2025 மே 11 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வசம் பல அங்கீகரிக்கப்படாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மே 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட பொருட்களில் ஒரு யானை முத்து, பல மரப்பட்டை துண்டுகள் மற்றும் ஒரு சிறிய பொறிக்கப்பட்ட புத்தர் சிலை ஆகியவை அடங்குவதாக சிறைச்சாலை உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரித்தபோது, ​​ரம்புக்வெல்ல அந்தப் பொருட்களை தனது தந்தை தனக்குக் கொடுத்ததாகவும், தனது பாதுகாப்பிற்காக அவற்றை எடுத்துச் சென்றதாகவும் கூறினார்.

பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X