2025 ஜூலை 07, திங்கட்கிழமை

காங்கேசன்துறை துறைமுகத்தில் விரைவு அபிவிருத்தி திட்டங்கள்

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கேசன்துறை துறைமுகப் பணிகள் 2021ஆம் ஆண்டு நிறைவடையும் போது,  சரக்குப் போக்குவரத்து கப்பல்கள் வந்து செல்லுமளவுக்கு விரைவு அபிவிருத்தி திட்டமொன்று முன்னெடுக்கப்படுமென, அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த துறைமுகத்துக்கு சரக்குக் கப்பல்கள் வந்துச் செல்வதால் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி துறைகளுக்கு அதிகம் வாய்ப்புகள் கிடைப்பதுடன், வடக்கு மக்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்குமென்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கடனுதவியின் 45.27 மில்லியன் டொலர்கள் நிதியுதவியின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இத்திட்டத்தை விரைவுப்படுத்துவதற்காக,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் , அரசின் உயர் அதிகாரிகள் இணைந்து ​அடுத்த மாதம் 15ஆம் திகதி காங்கேசன்துறைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .