2025 ஜூலை 19, சனிக்கிழமை

காட்டு யானைப் பிரச்சினைக்குத் தீர்வு

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காட்டு யானைகளுக்கு உணவளிப்பதற்காக, 15 ஏக்கர் நிலைப்பரப்பை, புற்றரையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என, நிலையான அபிவிருத்தி மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இந்த நோக்கத்துக்குத் தேவையான வனவளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், நேற்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்டுள்ள வனப்பகுதிகளில், புற்களை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், இதற்கான நிதி, ஐக்கிய நாடுகள் சபையால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தப் புற்றரைகள் மூலம், சுமார் 1,500 காட்டு யானைகளுக்கு உணவளிக்க மு​டியும் என்றும் இதனால், உணவு தேடி, கிராமங்களுக்குள் நுழையும் யானைகளின் அளவு கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையால், மனிதன் - யானைகளுக்கிடையில் ஏற்பட்டுள் முரண்பாடுகளை தீர்க்கமுடியும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X