Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 11 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.கமல்
அன்பானவர்கள் காணாமல் ஆக்கப்படுவது, அதிகமான வேதனையை ஏற்படுத்துமெனத் தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், உறவுகளைத் தொலைத்தவர்களுக்கு, சகல விதத்திலும் நியாயம் கிடைக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
காணாமல் ஆக்கபட்டோர் அலுவலகம் நிறுவப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாவதையிட்டு, குறித்த அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
காணாமற்போனோர் அலுவலகத்துக்கு, ஒரு வருடம் பூர்த்தியாவதையிட்டு, தமக்குரிய பணிகள் அனைத்தையும் சரிவர நிறைவேற்றக் கடமைபட்டுள்ளதாகவும் நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து, அவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
நபரொருவர் காணாமல் ஆக்கப்படுவதால், அவரது உறவினர்கள் பெரும் வேதனையை அடைவதோடு காணாமற்போனவரை நினைவுகூறகூட முடியாத துன்பகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனரெனக் குறிப்பிட்டுள்ள சாலிய பீரிஸ், இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஒரு சமூகம் என்ற ரீதியில் இவர்களின் துன்பங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்காமல், அவர்களது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சகல உரிமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும், அவர் அந்த அறிக்கையூடாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
4 hours ago