2025 ஜூலை 05, சனிக்கிழமை

கான்ஸ்டபிளின் வீட்டில் கைக்குண்டு தாக்குதல்

Editorial   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் வீட்டில் இன்று (09) காலை கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள அறையில் தானும் தனது 2 வயது மகளும் உறங்கிகொண்டிருந்த வேளையில், இனந்தெரியாத நபர்களால் ஜன்னல் வழியாக வீசப்பட்ட கைக்குண்டானது, நுளம்பு வலையின் மீது பட்டு, கீழே நிலத்தில் விழுந்து வெடித்ததாக குறித்த பெண் கான்ஸ்டபிள் தெரிவித்திருந்தார்.

அத்தோடு இச்சம்பவம் தொடர்பில் தனது கணவரான இராணுவ வீரர் மீது சந்தேகங்கொள்வதாகவும், தனக்கும் அவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுகொண்டிருப்பதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .