Editorial / 2017 ஜூலை 07 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் உப -பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடமிருந்து 20,000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட, அதே பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள், ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது மிகவும் பலமீனமான வழக்காக இருப்பதன் காரணமாக, சந்தேகநபருக்கு பிணை வழங்குவதாக, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டார அறிவித்தார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள சீன கட்டுமான நிறுவனமொன்றின் குப்பைகள், கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் கொட்டப்பட்டமை தொடர்பில் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக 1 இலட்சம் ரூபாய் வழங்குமாறு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் உப-பொலிஸ் பரிசோதகர், சீன கட்டுமான ஊழியர்களிடம் இலஞ்சம் கோரியுள்ளார்.
இது தொடர்பில், சீன கட்டுமான ஊழியர்களால், பொலிஸ் தலைமையகத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை மீளப்பெறுவதற்கு உதவதாகக் கூறியே, கான்ஸ்டபிள், 30,000 ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளதுடன், உப பரிசோதகர் 20,000 ரூபாயை கொடுத்தபோதே, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் செய்யப்பட்டிருந்தார்.
44 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago