2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கார் மின் கம்பத்தில் மோதி விபத்து

Editorial   / 2020 செப்டெம்பர் 06 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

பேருவளை – காலி வீதியின் ஹெட்டிமுல்லை சந்தியில்,  நேற்று (05) நள்ளிரவு இடம்பெற்ற வாகன விபத்தில்,  காயமடைந்த நிலையில் தப்பிச்சென்றுள்ள சாரதி தொடர்பில், பேருவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேருவளையில் இருந்து அளுத்கமை நோக்கி , நள்ளிரவு 12.10 மணியளவில் அதிக ​ வேகத்தில் பயணித்த கார் ஒன்று, ஹெட்டிமுல்லை சந்தியில் வைத்து மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தையடுத்து, சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த கார் சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றைய நபர் ஆகியோர்,   விபத்தின்போது மதுபோதையில் இருந்துள்ளனர் என,  ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், காயமடைந்த இருவரும் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனரென, விபத்து தொடர்பில் விசாரணைகளை  மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .