Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2018 பெப்ரவரி 20 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
“உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க மடியாமல் தேர்தல்கள் ஆணைக்குழு தடுமாறுகிறது. தேர்தல் ஆணைக்குழுவினர், காற்சட்டையை கழற்றிவிட்டு நிர்வாணமாக நிற்கின்றனர். அவர்களுக்கு ஆற்றலோ, தகுதியோ இல்லை” என, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
“உறவு முறை, ஜாதி முறை அடிப்படையில் வாக்களிப்பு முறை மாறும். நாங்கள் கொண்டு வந்த வாக்களிப்பு முறையை மாற்றி, புதிய முறையை அறிமுகப்படுத்தினீர்கள், நாங்கள் அதற்கு முகங்கொடுத்து அதில் வெற்றிபெற்றுள்ளோம்.
“இந்த 3 ஆண்டுகளில் இந்த அரசாங்கம் என்ன செய்தது? நாங்கள் இல்லை என்றால் ஊடகங்களில் செய்திகளே இருந்திருக்காது. எங்களையும் எங்களைக் கைதுசெய்வதிலுமே, 3 ஆண்டுகளை இந்த அரசாங்கம் காலத்தைக் கடத்திவிட்டது. பிரதமருக்கு மக்களின் இதயத்துடிப்பு என்னவென்பது தெரியாது.
“மக்கள் தற்போது கொடுத்துள்ள ஆணையைப் புரிந்துகொண்டு இந்த அரசாங்கம் ஆட்சிபீடத்தில் இருந்து வெளியேற வேண்டும். இல்லையேல், இந்த இடமே துர்நாற்றம் வீசிவிடும். “இந்நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குழைத்தது ஐ.தே.கவே என ஜனாதிபதியே கூறியுள்ளார். இவ்வாறு கூறியபோதும் ஸ்ரீ.ல.சு.கவுக்கு குறைவான வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளன.
“மக்கள் ஆணை இல்லாத இந்த அரசாங்கத்துக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் இல்லை. உடுத்திருக்கும் உடையாவது எஞ்சிருக்க வேண்டும் என எண்ணினால், உங்களது பதவிகளில் இருந்து விலகிச் சென்றுவிடுங்கள்” என்றார்.
இதை குறுக்கிட்டு கூச்சலிட்ட அரசாங்கத் தரப்பினர், “கள்ளன் கள்ளன்” என்றனர். எனினும், தனதுரையை தொடர்ந்த விமல் வீரவன்ச, “கள்ளன்.. கள்ளன்.. என எம்மைக் கூறிவிட்டு நீங்கள் தான் கள்ள நாடகம் ஆடுகின்றீர்கள். ராஜிதவே, உங்களுக்கு வெட்கம் இல்லையா?” எனக் கேட்டார்
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago