Editorial / 2021 ஜனவரி 05 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பை ஏற்று, இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) இலங்கை வருகின்றார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளும் அவர், தனது விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் இருதரப்புச் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், இலங்கைக்கு முதலாவதாக வரும் வெளிநாட்டு உயர் மட்ட ராஜதந்திரி ஜெய்ஷங்கர் என்பதோடு, புத்தாண்டில் அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாகவும் இது அமைகின்றது.
உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளின்போது, பல்வேறு பகுதிகளில் இணைந்து செயற்படுவதில் இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு உறவைப் பலப்படுத்தவுள்ளன.
அவரது இவ்விஜயமானது, ‘காற்றுக் குமிழ் முறை’மையின் கீழ் அமைந்திருக்கும் அத்துடன், கொவிட்-19 கட்டுப்பாடுகளுடனேயே மேற்கொள்ளப்படுகின்றது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026