2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

காலி முகத்திடலின் சேத விவரம் வெளியானது

Nirosh   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி முகத்திடலுக்கு அருகில் கோட்டாகோ கம என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்ட போராட்டக்  களத்தால் சுமார் 49 இலட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

காலி முகத் திடலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை பெறுவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகார சபை கூறுகிறது.

அந்தக் காணியின் மீள்குடியேற்றம் மற்றும் அடிப்படைப் பணிகளுக்காக 1.5 இலட்சம் ரூபாவும் புல் வெட்டுவதற்கு 47.5 இலட்சம் ரூபாவும் செலவிடப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாகோ கம போராட்டத்தில் காலிமுகத்திடலுக்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .