Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோசமான வானிலை, இலங்கையின் அநேகமான பகுதிகளைப் பாதித்துள்ள போதிலும், காலி, களுத்துறை மாவட்டங்கள், அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.
இவ்விரு மாவட்டங்களிலும் மாத்திரம், நேற்று முன்தினம் (06) முதல் இதுவரை, குறைந்தது 3,677 குடும்பங்களைச் சேர்ந்த 13,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளம், மண்சரிவு ஆகியனவே, இவ்விரு மாவட்டங்களையும் முக்கியமாகப் பாதித்துள்ளன.
அதிக மழை காரணமாக, களுத்துறை மாவட்டத்தின் பிரதான வீதிகள், குறுக்கு வீதிகள் பல வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதென, களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் கேர்ணல் சாலிய டயஸ் தெரிவித்தார்.
அதிக மழைவீழ்ச்சியாக 102 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி, மத்துகம வோகன் தோட்டத்தில் பதிவாகியிருந்தது.
காலியிலும் பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில், இமதுவ, யக்கலமுல்ல வீதி, கனங்கே வாடியவத்த குறுக்கு வீதி, காலி உடுகம - தெல்லவ வீதியின் மஹாபோதிவத்த சந்தி, காலி மாபலகம வீதி என்பன நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், களு கங்கையை அண்மித்து இரு புறங்களிலும் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
நேற்று (07) பகல் 12 மணியாகும் போது பத்தேகம, மாபளகம ஆகிய நீர்நிலைகளின் நீர்மட்டம் 4.31 மீற்றராக அதிகரித்தனவென, கிங் கங்கை நீர்ப்பாசன முகாமைத்துவப் பொறியியலாளர் சமிலா கொடிதுவக்கு குறிப்பிட்டார்.
இதுவரை இந்த வௌ்ள அனர்த்தங்களால், களுத்துறை, புளத்சிங்கள, மத்துகம, அகலவத்தை பிரதேசத்தின் 3,500 வீடுகளுக்கும், பேராதனை, கடுகண்ணாவை, கலஹா, கலகெதர ஆகிய பிரதேசங்களில் 750 வீடுகளுக்கும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதென, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பேருவளைப் பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக, சீனன் கோட்டை வீதி, நளீம் ஹாஜியார் மாவத்தை, ஜாமியா நளீமியா வீதி ஆகியன வெள்ளத்தால் நீரில் மூழ்கியுள்ளன.
மொறட்டுவை
இதேவேளை, மொறட்டுவைப் பிரதேசத்தில், 926 வீடுகள் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளாரென, மொறட்டுவை பிரதேச செயலாளர் நிமாலி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மொறட்டுவை, தெலவல, பொருபன, மோல்பே, கட்டுபெத்த, கொரலவெல்ல வடக்கு, கொரலவெல்ல மேல், வில்லோரவத்த கிழக்கு, வில்லோரவத்த மேற்கு, மொரட்டுவெல்ல ஆகிய 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள வீடுகளே, இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனவெனவும், வலிப்பு நோய் வந்த ஒருவர், நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளாரெனவும், பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
(தகவல் உதவி: பீ.எம் முக்தார்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
30 minute ago
31 minute ago
1 hours ago