S.Renuka / 2025 நவம்பர் 30 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அல்லது சிக்கியுள்ள செல்லப்பிராணிகள், கால்நடைகள் மற்றும் தெரு விலங்குகளுக்கு உதவ முழுமையாக தயாராக இருப்பதாக இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் (SLVA) தெரிவித்துள்ளது.
அதன்படி, உதவிக்காக சங்கம் பின்வரும் அவசர தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது:
• பொது ஹாட்லைன்: 071 6000 666
• டாக்டர் மாலக லசந்தா: 071 414 5242
• டாக்டர் நிலுஷா: 070 610 3808
மீட்பு அல்லது மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் விலங்குகளைக் கண்டால், பொதுமக்களை தொடர்பு கொள்ளுமாறு SLVA தலைவர் டாக்டர் சுகத் பிரேமச்சந்திர ஒரு அறிக்கையில் வலியுறுத்தினார்.

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கால் நடைகளை காப்பாற்றி படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றியதாகவும். கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
56 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
59 minute ago
2 hours ago