2025 மே 09, வெள்ளிக்கிழமை

காளையை தட்டி அடக்கிய வங்கி ஊழியர்: (காணொளி)

Mayu   / 2024 ஜனவரி 16 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பிரபல வங்கியின் கிளை ஒன்றில் கால்நடை ஒன்று வழிதவறி நுழைந்த வினோதமான சம்பவம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் Unnao-வில் உள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சதார் பஜார் என்ற பகுதியில் அமைந்துள்ள குறித்த வங்கியின் பிரதான கிளையில் காளையொன்று வழிதவறி வங்கிக்குள் வந்துள்ளது.

திடீரென வங்கி வளாகத்திற்குள் நுழைந்த காளை, வங்கி வழங்கும் சேவைகளை பெற காத்திருக்கும் வாடிக்கையாளர் போல் ஒரு மூலையில் அமைதியாக நின்றது.

எனினும் வங்கியில் நுழைந்து வாடிக்கையாளர் போல அமைதியாக நின்ற காளையை பார்த்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பீதியடைந்து அலறினர்.

வங்கிக்குள் காளை புகுந்ததால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தொடர்ந்து வங்கிப் பணிக்காக வந்திருந்த வாடிக்கையாளர்கள் பீதியில் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X