2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

காவடி ஆட்டிக்கொண்டிருந்த இளைஞன் மரணம்

Editorial   / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை, மாதம்பேயில் உள்ள சுவிசுத்தாராமய விஹாரையில் ஏற்பாடு செய்த ஊர்வலத்தின் போது காவடி நடனமாடிக்கொண்டிருந்த 20 வயது இளைஞர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்ததாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எட்கந்துர, தனபத்தேகம பகுதியைச் சேர்ந்த பி.எம்.மஹிஷ பிரபாஷன என்ற 20 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

மதம்பே நகர வீதிகளில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது காவடி நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் நோய்வாய்ப்பட்டார். அவர், பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

கிரிக்கெட் வீரரான உயிரிழந்த இளைஞருக்கு எந்தவிதமான தொற்று நோயும் இல்லை என்றும், இளைஞனின் மரணம் நினைத்துப் பார்க்க முடியாதது என்றும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X