2025 மே 14, புதன்கிழமை

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை மரணம்

Editorial   / 2025 ஜனவரி 14 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்,கனகராசா சரவணன்,பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்காமடி குறுக்கு வீதியில் திங்கட்கிழமை (13) மாலை  வீட்டின் கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயதான முகம்மது சாஜித் மெஹ்ரிஸ் அய்ரா எனும் பெண் குழந்தை மரணமடைந்துள்ளது .

குழந்தையின் தந்தை கல்முனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் வீட்டில் தாயுடன் இருந்த 2 வயதான பெண் குழந்தையே வெளியில் விளையாடிக் கொண்டிருந்த தருணம் கிணற்றுக்கு அருகில் இருந்த கதிரையில் ஏறி கிணற்றினுள் தவறி வீழ்ந்து மரணமடைந்துள்ளது. 

அயலவர்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில்  கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் ஜனாசா ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் , ஏறாவூர் பொலிஸாரின் விசாரணைகளை அடுத்து பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீரினால்  மரண விசாரணை நடத்தப்பட்டு கிணற்று நீரில் வீழ்ந்து ஏற்பட்ட விபத்து மரணம் என உறுதி செய்யப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஜனாஸா ஒப்படைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .