Freelancer / 2022 டிசெம்பர் 20 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுதலைப் புலிகளை உயிர்ப்பிப்பதற்காக போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி கிம்புலாஎல குணா உள்ளிட்ட 9 இலங்கையர்களை இந்திய தேசிய பாதுகாப்பு விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்தே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய பாதுகாப்பு விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
டுபாய், பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு அடிக்கடி பயணம் செய்த பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஹாஜி சலீமுடன் கைதானோரில் இருவர் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
குணசேகரன் எனப்படும் கிம்புலாஎல குணா, புஷ்பராஜா, மொஹமட் அஸ்மின், அழகப்பெரும சுனில் காமினி பொன்சியா, ஸ்டான்லி கென்னடி, லடியா சந்திரசேன, தனுக்க ரொஷான், வெல்ல சுரங்க மற்றும் திலிபன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணைப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
36 minute ago
41 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago
17 Dec 2025
17 Dec 2025