2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கியூபாவின் கிராமமொன்றை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

Editorial   / 2019 ஜூன் 26 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூறாவளி காரணமாக, சேதமடைந்த கியூபா நாட்டின் கிராமமொன்றை மீளமைப்பதற்காக, 50,000 அமெரிக்க டொலர் நிதியை நன்கொடையாக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தாண்டு ஜனவரி மாதம் கியூபாவில் ஏற்பட்ட சூறாவளியால் ஹவநாஹி-ரெக்லாவுக்கு அண்மையிலுள்ள கிராமமே முற்றாக சேதமடைந்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையில் காணப்படும், நல்லுறவை மேலும் உறுதிப்படுத்துவதற்காகவும் இந்தாண்டுடன் இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருட நிறைவையொட்டியும்  நிதி நன்கொடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன முன்வைத்த இந்த ​யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .