2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கிராண்ட்பாஸ் இளைஞன் படுகொலை: ஒருவர் கைது

Editorial   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 20 வயது இளைஞனை அரிவாளால் வெட்டிக் கொன்ற சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (11) கைது செய்யப்பட்டதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நபர் வெல்லம்பிட்டி, வதுல்லவத்தையைச் சேர்ந்தவர். போதைப்பொருள் பணம் கொடுக்காதது தொடர்பான தகராறில் இந்த இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இறந்த இளைஞன், இன்றைக்கு  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நபர் சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று பொலிஸார் கண்டறியந்துள்ளனர்.

அந்தக் கொலை வழக்கு தொடர்பாக சந்தேக நபருக்கும் இறந்தவருக்கும் இடையே பகைமை இருந்ததாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

நவலோகபுர பகுதியில் இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்தக் கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X