2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் இராணுவத்தளம்: அமெரிக்கா கோரவில்லை

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாமொன்றை அமைப்பது குறித்து ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், எந்தவித வேண்டுகோளையும் விடுக்கவில்லை என்று, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இராணுவ தளமொன்று, திருகோணமலையில் அமைக்கப்படவுள்ளதாக, சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பாக அமெரிக்க தூதரகமும் இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவித்திருந்தன.

இது குறித்து முழுமையான தெளிவுபடுத்தல் அவசியம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, நேற்று, நாடாளுமன்றத்தில் வினவியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர லக்ஷ்மன் கிரியெல்ல, இது தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்று கூறியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .