2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கிழக்கில் முதலாவது கொரோனா மரணம்

Editorial   / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த ஒருவர் மரணமடைந்துள்ளார். இது கிழக்கில் முதலாவது மரணமாக பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரெ நேற்று (10) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதுதொடர்பிலான தகவலை  இன்று(11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர், கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு நேற்று(10) இரவு   கொண்டு சென்றுகொண்டிருந்த போது, மட்டக்களப்பு பகுதியில்  வைத்தே உயிரிழந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X