Editorial / 2023 நவம்பர் 27 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்றால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற
உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹ்மத் கிழக்கு மாகாண, ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஹாபிஸ் நஸீர் அஹ்மதுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் அவருடைய பாராளுமன்ற பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஊவா மாகாண ஆளுநராக நியமித்து விட்டு , அதற்கு பதிலாக ஹாபிஸ் நஸீரை கிழக்கு ஆளுனராக,ஜனாதிபதி நியமிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டுள்ளன.
எனினும், அடுத்த தேர்தல் வரை கிழக்கு ஆளுநர் உள்ளிட்ட ஆளுநர் பதவிகளில் எவ்வித மாற்றமும் செய்யும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
10 minute ago
23 minute ago
31 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
31 minute ago
32 minute ago