Editorial / 2021 நவம்பர் 24 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை துறைமுக அதிகார சபையின் கிழக்கு முனையத்திற்கான கப்பலில் இருந்து தரைக்கு தொழிற்படும் 14 பாரந்தூக்கிகள், தண்டவாளத்தில் பொருத்தி தொழிற்படும் 40 தன்னியக்க சுமைதாங்கிகள் மற்றும் கொள்கலன்கள் ஏற்றிச் செல்லும் 30 வாகனங்கள் பெறுகைக்காக 2021 மார்ச் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் முறைமையைப் பின்பற்றி போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், 06 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, பெறுகை ஆட்சேபனை சபையின் பரிந்துரைக்கமைய கப்பலில் இருந்து தரைக்கு தொழிற்படும் 12 பாரந்தூக்கிகள், தண்டவாளத்தில் பொருத்தி தொழிற்படும் 40 தன்னியக்க சுமைதாங்கிகளுக்கான பெறுகையை, ஷன்ஹாயி ஷென்ஹூவா ஹெவி கம்பனிக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago