2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

குஜராத் விபத்து : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல்

Freelancer   / 2022 ஒக்டோபர் 31 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து உயிரிழந்த   மக்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் மோர்பி பகுதியில் நேற்று (30) பிற்பகல் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் சுமார் 132 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் 400 பேர் கட்டிடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X