Freelancer / 2025 ஜனவரி 06 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் நேற்று (05) விபத்து ஒன்று ஏற்பட்டது. வழக்கமான பயிற்சியின் போது கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக துருவ் ஹெலிக்கொப்டர் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில், ஹெலிக்கொப்டரில் பயணித்த 2 பைலட்டுகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
போர்பந்தர் விமான நிலையம், தற்போது பயணிகள் விமானங்களை இயக்கவில்லை. அங்கு இந்திய விமானப்படை மற்றும் ஏனைய படைப்பிரிவுகளின் விமானங்கள், ஹெலிக்கொப்டர்கள் பயன்படுத்துகின்றன. கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிக்கொப்டர்களும் இதே விமான நிலையத்தை பயன்படுத்துகின்றன.
மேலும் திடீரென ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளானதை அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர்.
அதேபோல், இந்திய கடலோர காவல்படை விபத்தை தொடர்புடைய தகவல்களை உறுதிப்படுத்தியது. இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக துருவ் ஹெலிக்கொப்டர், குஜராத்தின் போர்பந்தரில் பயிற்சி பணியின்போது விபத்தில் சிக்கியது. இதில் 3 பேர் பலியாகினர் என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. (a)
30 minute ago
36 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
36 minute ago
37 minute ago
42 minute ago