2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

குட்டி தேர்தலுக்கு முந்திய கட்சிகளும் சுயேச்சைகளும்

S.Renuka   / 2025 மார்ச் 06 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நாட்டின் மூன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 19 சுயேச்சைக் குழுக்களும் புதன்கிழமை (05)  அன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான கட்டுப்பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட தேர்தலுக்கான கட்டுப்தொகை சேகரிப்பு 03 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 19 ஆம் திகதி முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 08, 09, 13, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .