Editorial / 2020 மே 20 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 221ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றுடைய 12 கடற்படையினர் வைத்தியசாலையி்ல் இருந்து வெளியேறியிருந்தனர்.
கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை மற்றும் வெலிகந்த வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களே இவ்வாறு குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடற்படையின் குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துவிட்டு தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
11 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் அனைவரம் நேற்று அநுராதபுரம் மற்றும் திருகோணமலை பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே இவர்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, பூனானி கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து மேலும் 12 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
55 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
5 hours ago