Editorial / 2019 செப்டெம்பர் 04 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அருவாக்காடு குப்பை பிரிவுக்கு கொழும்பில் இருந்து கழிவுகளை ஏற்றிச்செல்லும் லொறிகளுக்கு சேதம் விளைவிக்கின்றமை மற்றும் அதற்கு எதிர்ப்பு வெளியிடுகின்றமை ஆகியவற்றை தடை செய்து புத்தளம் நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
அருவாக்காடு குப்பை பிரிவுக்கு கொழும்பில் இருந்து கழிவுகளை ஏற்றிச்செல்லும் லொறிள் மீதான தாக்குதல் தொடர்பில் புத்தளம் பொலிஸார் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அருவாக்காடு குப்பை பிரிவுக்கு குப்பைகளை கொண்டு செல்வதற்கு எதிராக பிரதான வீதி மற்றும் ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றமைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற ஏதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்த நால்வரிடம் இந்த தடையுத்தரவை கையளிக்குமாறு தெரிவித்த நீதிமன்றம், அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026