Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2018 மார்ச் 23 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என்ற இலங்கை நாட்டின் நாமத்தில், சோஷலிசத்தில் குப்பையும் குடியரசில் மலமும் கலக்கப்பட்டுள்ளனவென, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில், நேற்று (22) இடம்பெற்ற புலமை சொத்து திருத்தச் சட்டத்தின் 2ஆம் மதிப்பீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“எமது நாட்டுக்கு தரமொன்று உள்ளது. அது இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு என்பதாகும். இந்தப் பெயரை வைத்தது ஐக்கிய தேசியக் கட்சியாகும். இந்த தரத்தை எடுத்துக்கொண்டால், ஜனநாயகம் என்ற சொல்லில் இன்று ஜனநாயகம் உள்ளதா? தேர்தலை நடத்துவதனால் மாத்திரம் ஜனநாயகம் வந்துவிடப்போவதில்லை. தேயிலைக்ககான தரத்தைப் பற்றி பேசும் நாம், நாட்டின் தரத்தையும் ஆராய வேண்டும்.
“ஜனநாயகம் என்பது, தவறிழைத்தால், அதனைத் திருத்தி, முன்னோக்கிச் செல்லுதல், மறுசீரமைப்புக்கு வாய்ப்பளித்தல் என்பதாகும். இது இன்று நடைபெறாததால், நாடு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நாட்டில், மன்னர் ஆட்சியே காணப்படுகின்றது. ஏனென்றால், நிர்வாகிகள் அனைவருக்கும் மன்னர் சார்ந்த மனோநிலையிலேயே உள்ளனர்.
“அடுத்தது, குடியரசில் மலமும், சோஷலிசத்தில் குப்பையும் போட்டுள்ளனர். எனவே, இந்த இராஜ்ஜியத்துக்கு புதிய தரம் வேண்டும் குறிப்பாக, மீள் தரம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
17 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago