2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

குருநாகல் நோயாளிக்கு கொரோனா தொற்றில்லை

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் போதனா வைத்தியசாலையில் நேற்று  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்ட நபருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதியாகியுள்ளதென, குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பானர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார்.


இவருக்கு கடுமையான காய்;ச்சல் காணப்பட்டதால், இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு நேற்றுடன் தற்காலிகமாக மூடப்பட்டு;, இன்று மீண்டும் திறக்கப்பட்டது.


அத்துடன் வைத்தியர்கள் 7 பேர் உள்ளிட்ட 46 பேர் சுயதனிமைக்குட்படுத்தப்பட்ட நிலையிலேயே, இவரது இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டு அவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .