2025 மே 15, வியாழக்கிழமை

குருந்தூர் மலை விவகாரம்;பொலிஸில் முறைப்பாடு

Simrith   / 2023 ஜூலை 16 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் சைவவழிபாடுகளை  மேற்கொள்ள முடியுமென ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) குருந்தூர்மலையில் சைவவழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்களான அன்டனி ஜெயநாதன் பீட்டர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன் ஆகியோரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் தேரர்கள் மற்றும், சில சிங்கள மக்களே இவ்வாறு இடையூறு விளைவித்ததாக குறித்த முறைப்பாட்டில் தாம் குறிப்பிட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு நீதிமன்றக் கட்டளையை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிஸார் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு  பக்கச்சார்பாகச் செயற்பட்டதாகவும் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளதாக முறைப்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .