2025 ஜூலை 05, சனிக்கிழமை

குற்றச்சாட்டை மறுக்கும் வர்த்தக அமைச்சு

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஜனவரி 07 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில தினங்களாக தொழில் மற்றும் வர்த்தகர் அமைச்சர் ரிஷாட் பதியூதின் மீது அவதூறு செலுத்தப்பட்டு, அகில இலங்கை அரிசி உற்பத்தியாளர்களின் சங்கத்தினால் கூட்டுறவு திணைக்களத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள  சில குற்றச்சாட்டுகளை மறுப்பதாக தொழில் மற்றும் வர்த்தகர் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்தார்.

அமைச்சில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அதாவது கூட்டுறவு சங்கங்களைப் பதிவு செய்யும் விடயத்தில் அமைச்சு ரிஷாட் பதியூதீன் தலையிடுவதாக குற்றச்சாட்டு விடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், கடந்த வருடம் நடுப்பகுதியில் கூட்டுறவு சங்கமொன்றையும் கூட்டுறவு இயக்கமொன்றையும் எமது திணைக்களத்தில் பதிவு செய்தோம். இதன்போது எமது திணைக்கள அதிகாரிகள் சுயாதீனமாகவே செயற்பட்டனர் இந்தப் பதிவுகளை மேற்கொள்ளும் போது, கூட்டுறவு அதிகாரிகளுக்கு அமைச்சர் ரிஷாட் பதியூதினோ அல்லது ​வேறு அதிகாரிகளோ எவ்வித அழுத்தங்களையும் விடுக்கவில்லையென்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .