2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

குழந்தைக்கு சிகரட்டால் சூடு வைத்த நபர் கைது

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

1 வயதும் 10 மாதங்களு​மான குழந்தையொன்றை பல மாதங்களாக சிகரட்டால் சூடு வைத்து வந்த சந்தேகநபரொருவரை, சியம்பலாண்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சியம்பலாண்டுவ, 5ஆம் இலக்க பிரதேசத்தில் வசிக்கும் குறித்த சந்தேகநபரை, கைது செய்ய முற்பட்ட வேளையில், குறித்த நபர் தப்பிச் சென்று தலைமைறைவாகியிருந்ததோடு, இவரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் சில மூலோபாயங்களை பயன்படுத்தி, பெண் பொலிஸ் அதிகாரியொருவரை குறித்த நபருடன் காதலராக சில நாள்கள் அலைபேசியில்  உரையாட வைத்து, பின்னர் தன்னை சந்திக்க நேரில் வரும்படி அழைப்புவிடுக்கப்பட்டதாகவும், குறித்த சந்தேகநபரும் தெபகவெல பிரதேசத்துக்கு வருகைதந்த போது, பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரை சியம்பலாண்டுவ பிரதேச நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .