Editorial / 2026 ஜனவரி 23 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

தான் சமைத்த முட்டை குழம்பு ருசியாக இல்லை என்று கூறியதற்காக, மனைவி செய்த விசித்திரமான சம்பவம் ஒன்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், பதிவாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பத்வுன் மாவட்டத்தில் உள்ள தம்பதிக்கு இடையிலேயே இந்த விபரீதம் நடந்துள்ளது. சம்பவத்தன்று இரவு மனைவி முட்டை குழம்பு சமைத்துள்ளார். சாப்பிட அமர்ந்த கணவர், குழம்பை ருசி பார்த்த பின்னர், "குழம்பு ருசியாக இல்லை" என குறை கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மனைவி திடீரென கணவனின் நாக்கை மிகக் கடுமையாகக் கடித்து இழுத்துள்ளார்.
இதில் கணவனின் நாக்குத் துண்டாகி கீழே விழுந்துள்ளது. வலி தாங்க முடியாமல் அலறிய கணவரை உறவினர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர்.
கணவனின் நாக்கு சுமார் 2.5 சென்டிமீட்டர் (2.5 cm) அளவிற்குத் துண்டிக்கப்பட்டுள்ளது.
நாக்கு முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சை செய்தாலும் அதனை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என வைத்தியர்கள் கைவிரித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நபர் வாழ்நாள் முழுவதும் பேசுவதில் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில், பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாதாரண உணவுக் குறைபாட்டிற்காக கணவனின் நாக்கையே துண்டித்த மனைவியின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago