2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

குவைத்தில் இடர்களை எதிர்நோக்கிய 57 பேர் நாடுதிரும்பினர்

Editorial   / 2019 ஏப்ரல் 01 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.கே.ஜீ. கபில

தொழில் நிமித்தம் குவைத்துக்குச் சென்று, அங்கு பல்வேறு இன்னல்கள், மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளான, இலங்கைப் பணியாளர்கள் 57 பேர், அந்நாட்டிலிருந்து, இன்று (01) காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்களிடையே, 9 ஆண்களும், 48 பெண்களும் உள்ளனர். இவர்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குவைத்திலுள்ள, இலங்கை தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் இவ்வாறு நாட்டுக்கு  அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் தத்தமது வீடுகளுக்குச் செல்வதற்கான கொடுப்பனவுகளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ளது.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .