2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கேர்ணல் கலன அமுனுபுர விவகாரம்; இராணுவத்தின் பதில்

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதிக்காக்கும் படையில் பணியாற்றிவரும் லெப்டினன் கேர்ணல் கலன அமுனுபுர, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது, எந்தவிதமான போர்க் குற்றங்களில் ஈடுப்படவில்லை  என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

அவர் மீது போர்க் குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ஐ.நா, அவரை உடனடியாக நாட்டுக்கு திருப்பி அழைத்துகொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம்  தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரி​கேடியர் சுமித் அத்தபத்து, “இது தொடர்பில் இராணுவத்துக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.  எனினும் ஐ.நாவின் இக்கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் அவர் கூறினார்.

​மேலும், மனித உரிமை மீறல்களுடன் அவர் தொடர்பு பட்டிருக்கவில்லை என்பதை எம்மால் உறுதியாக கூற முடியும் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .