Editorial / 2020 ஜூலை 09 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது என்பது உறுதி செய்யப்பட்டதாக இராணுவத்தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள எந்தவொரு கைதிக்கோ அல்லது அதிகாரிக்கோ கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR முடிவுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கைகள் இன்று (09) கிடைக்கும் எனவும் இராணுவத்தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது கூறியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையின் கைதி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானவராக நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
56 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago