J.A. George / 2021 டிசெம்பர் 29 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைதிகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பூஸ்டர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் இன்று (29) முதல் வழங்கப்படுவதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொவிட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசி 18,453 கைதிகளுக்கு வழங்கப்படுவதாக ஏகநாயக்க கூறியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெலிக்கடை, மெகசின், கொழும்பு விளக்கமறியல், வட்டரெக்க, மஹர மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளில் இன்று (29) முதல் கட்டமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கும் தடுப்பூசி வழங்க எதிர்பார்க்கப்படுவதாக ஏகநாயக்க மேலும் கூறியுள்ளார்.
28 minute ago
1 hours ago
5 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
5 hours ago
14 Dec 2025